Quit Smoking – My Experience

I remember the very first day i started smoking with my higher secondary school friends back in 1995 and i did turned a heavy smoker when i joined my engineering as I’m away from my home for my study. Its always fun to be with friends and smoking. Even though, I almost stopped smoking after my marriage, I did it once in a while when meeting friends. I struggled to quit it completely. But things got better after my son’s arrival. There is only one way to quit smoking.It’s your will power. Even though its only will power, I would say some other factor to add was,

1.Love for my son

My son loves to be with me always and i loved this part. I’m so overwhelmed with his love even when he is so young he wants only me with him always. I wanna be so clean with my habits so that i wont infect anything to my loving son. This pushes me to stop smoking all my life.

2.Ignore your Smoking Friends for a while

Even though i wish to stop smoking permanently,  it’s itching when i see people smoke in-front of me during any friends gathering. The best thing to quit smoking is stop meeting your friends who smokes for a while. Even though its sounds weird, this will help you 100%.

 

நண்பர்களால் நலம் பெற்றேன்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

கொஞ்ச நாளகாவே மனதிற்குள் ஒரு போராட்டம் , அதுயும்  யாராவது நம்மளை பற்றி சந்தோஷ பட்டளோ , இல்லை சின்ன பெருமை பட்டளோ , எனக்குள் ஒரு பூரிப்பு. இந்த சின்ன பூரிப்பு அடைய  எத்தனை எத்தனை கஷ்டங்கள், எத்தனை துயரங்கள். இதை சாதிக்க என்னால் முடிந்திருக்குமா இவர்கள் இல்லை என்றால் , யார் , என் நண்பர்கள் இல்லை என்றால். என்ன கைமாறு செய்ய போகிறோம் என்று.

இந்த கடிதம், அவர்களை, அவர்கள் உதவியதை நினைத்து பார்த்திட ஒரு வாயப்பு, நண்பர்களால் ஒருவனின் வாழ்கையை மேம்படுத்த முடியும் என்று உலகிற்கு சொல்லிட, ஒவ்வொருவரும்  மற்றவரின் வாழ்கையில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அறிவிக்க ஒரு முயற்சியே.

பத்தாம் வகுப்பு வரை நான் படித்தது என் நகரின் மேல் தட்டு மக்கள் மட்டுமே பயிலும் மிக சிறந்த பள்ளி.அங்கு நான் தான் கதாநாயகன், என்னுடன் இருப்பதே பெருமை என்று நினைக்கும் என் நண்பர்கள்.படிப்பு அவளவாக வரவில்லை என்றாலும் சேட்டையில், விளையாட்டில் நம்மை மிஞ்ச ஆள் இல்லை.என் முதல் நண்பர்கள் வட்டம் பிறந்தது இங்கே தான். உயிர் நண்பர்கள் பிரசன்ன வெங்கடேஷ் , ம்.ப.விஜய், ஸ்ரீகாந்த் மற்றும் என் சக தோழர்கள் ஸ்ரீதரன், ஈஸ்வரன், ஜெயந்தீஸ்வரன், குமாரசுவாமி, ரத்னசபாபதி, சரவணா குமார் இன்னும் நிறைய.எனக்கு தெரிந்து யாரும் இந்தியாவில் இல்லை.

எனக்கு, என் அப்பாவின் கஷ்டம் புரிந்து இருந்தது , வெள்ளிகிழமை கூட சீருடையில் போகும் ஒரே மாணவன் நானாக தான் இருப்பேன்.ஹ்ம்ம். வெட்டி கதைகள் எதற்கு விசயத்திற்கு வருவோம்.

பிரசன்ன வெங்கடேஷ் , என்னுடன் இன்னும் அடிக்கடி பேசி கொண்டு இருக்கும் இந்த நண்பர் லண்டனில் மருத்துவராக இருக்கிறார், இவர் இல்லை என்றால் நான் 10வது பாஸ் பண்ணவே முடிந்து இருக்காது. ஆம் இவர் தான் எனக்கு 10வது பாட புத்தகங்கள் வாங்கி தந்தவர். இன்று வரை இது யாருக்குமே தெரியாது.ஒரு கை கொடுப்பதை அடுத்த கைக்கு தெரியாமல் உதவி செய்வது எப்படி என்பதை கற்று தந்தவர்.

ம்.ப.விஜய், இவர்கள் குடும்பமே கருணையின் வடிவம், இவரின் அக்கா, அம்மா எல்லோருமே நன்கு பரிச்சயம். பசித்தால் போய் நிற்பதே இவர்கள் வீடு தான். எனக்கு கனிவை கற்று தந்தவர்கள்.

ஸ்ரீகாந்த், என்னிடம் அவன் புத்தகங்களை தந்து எனக்காக வரண்டவில் முட்டி போட்டு நின்ற இந்த கணிபொறி வல்லுனரிடம் நான் கற்று கொண்டது பணத்தை விட நட்பிற்கு பலம் அதிகம் என்பதை.

என் வாழ்க்கையின் மிக பெரிய திருப்பம், உயர் நிலை படிப்பை MDTல் தொடர்ந்தது. இங்கு தான் நான் கலாட்டா நாயகனாக மாறினேன்.இதை பற்றி தனி ஒரு Blogல் விவரிப்போம். இங்கும் எனக்கு நல்ல நண்பர்கள் கிட்டினார்கள். ஸ்ரீனிவாசன், செந்தில், குரு, நீலகண்டன், துரைசாமி, மதன்.என்னை போலவே அனைவரும் நண்பர்களுக்காக எதையும் செய்யும் மூடர்கள்.

அடுத்ததாக என் கல்லூரி நண்பர்கள், பரத், பால முருகன், பால் ஸ்டீபன்,ஜெரால்ட், மணி, பொன்னுசாமி, அசோக், சங்கர், டொமினிக், ஹிஜாஸ், கிருஷ்ணகாந்த், மாதவராஜ், சிவ பாலன், மிராண்டா, ராஜேஷ், கிருஷ்ணகுமார், ஜிதேஷ், பினு  இன்னும் சிலர்.இவர்களிடம் கற்று கொண்டது ஏராளம்.

பரத் , இவர் இல்லாவிட்டால் நான் இன்று இந்த நிலைமையில் இல்லவே இல்லை.நான் கேட்காமலே என் நிலைமை அறிந்து வாரி வழங்கிய வள்ளல். நான்கு வருடங்கள் என்னை கவனித்து கொண்டவர். வேலை தேடும் நாட்களிலே எனக்கு சோறு போட்டவர். இன்னும் எத்தனை , எத்தனையோ.இவனை பார்த்து  தான் இவனை போல் நாமும் பிறருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவ வேண்டும் என்ற உத்தம எண்ணம் எனை ஆட்கொண்டது.

இன்னும் நண்பர்கள்  யாகூப், அசோக்,  ஷ்யாம்,  விவேக்,  திவாகர், ஈஸ்வர், குருமூர்த்தி, சுகு, அன்பு, ஷமீம், ஐயப்பன், சுதிர், கற்பகம், சுனிதா போன்ற நல்ல உள்ளங்கள் என் நண்பர்களாக கிட்டியது என் பாக்கியமே!

இவர்களிடம் கற்று கொண்ட நல்ல விஷயங்களை செயல்படுத்தி நாலு பேருக்காவது உதவி செய்வதே இவர்களுக்கு நான் ஆற்றும் நன்றி கடனாகும்.

நண்பர்கள் என்றால் சேர்ந்து கும்மாளம் அடிக்கவும் , கூத்து அடிக்கவும் என்ற எல்லோரின் எண்ணங்களை மாற்ற ஒரு முயற்சியே இந்த கட்டுரை.

Follow

Get every new post delivered to your Inbox.