Rajaganapathy’s Weblog

Just another WordPress.com weblog

நண்பர்களால் நலம் பெற்றேன்

Posted by rajaganapathy on May 22, 2008

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

கொஞ்ச நாளகாவே மனதிற்குள் ஒரு போராட்டம் , அதுயும்  யாராவது நம்மளை பற்றி சந்தோஷ பட்டளோ , இல்லை சின்ன பெருமை பட்டளோ , எனக்குள் ஒரு பூரிப்பு. இந்த சின்ன பூரிப்பு அடைய  எத்தனை எத்தனை கஷ்டங்கள், எத்தனை துயரங்கள். இதை சாதிக்க என்னால் முடிந்திருக்குமா இவர்கள் இல்லை என்றால் , யார் , என் நண்பர்கள் இல்லை என்றால். என்ன கைமாறு செய்ய போகிறோம் என்று.

இந்த கடிதம், அவர்களை, அவர்கள் உதவியதை நினைத்து பார்த்திட ஒரு வாயப்பு, நண்பர்களால் ஒருவனின் வாழ்கையை மேம்படுத்த முடியும் என்று உலகிற்கு சொல்லிட, ஒவ்வொருவரும்  மற்றவரின் வாழ்கையில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அறிவிக்க ஒரு முயற்சியே.

பத்தாம் வகுப்பு வரை நான் படித்தது என் நகரின் மேல் தட்டு மக்கள் மட்டுமே பயிலும் மிக சிறந்த பள்ளி.அங்கு நான் தான் கதாநாயகன், என்னுடன் இருப்பதே பெருமை என்று நினைக்கும் என் நண்பர்கள்.படிப்பு அவளவாக வரவில்லை என்றாலும் சேட்டையில், விளையாட்டில் நம்மை மிஞ்ச ஆள் இல்லை.என் முதல் நண்பர்கள் வட்டம் பிறந்தது இங்கே தான். உயிர் நண்பர்கள் பிரசன்ன வெங்கடேஷ் , ம்.ப.விஜய், ஸ்ரீகாந்த் மற்றும் என் சக தோழர்கள் ஸ்ரீதரன், ஈஸ்வரன், ஜெயந்தீஸ்வரன், குமாரசுவாமி, ரத்னசபாபதி, சரவணா குமார் இன்னும் நிறைய.எனக்கு தெரிந்து யாரும் இந்தியாவில் இல்லை.

எனக்கு, என் அப்பாவின் கஷ்டம் புரிந்து இருந்தது , வெள்ளிகிழமை கூட சீருடையில் போகும் ஒரே மாணவன் நானாக தான் இருப்பேன்.ஹ்ம்ம். வெட்டி கதைகள் எதற்கு விசயத்திற்கு வருவோம்.

பிரசன்ன வெங்கடேஷ் , என்னுடன் இன்னும் அடிக்கடி பேசி கொண்டு இருக்கும் இந்த நண்பர் லண்டனில் மருத்துவராக இருக்கிறார், இவர் இல்லை என்றால் நான் 10வது பாஸ் பண்ணவே முடிந்து இருக்காது. ஆம் இவர் தான் எனக்கு 10வது பாட புத்தகங்கள் வாங்கி தந்தவர். இன்று வரை இது யாருக்குமே தெரியாது.ஒரு கை கொடுப்பதை அடுத்த கைக்கு தெரியாமல் உதவி செய்வது எப்படி என்பதை கற்று தந்தவர். 

ம்.ப.விஜய், இவர்கள் குடும்பமே கருணையின் வடிவம், இவரின் அக்கா, அம்மா எல்லோருமே நன்கு பரிச்சயம். பசித்தால் போய் நிற்பதே இவர்கள் வீடு தான். எனக்கு கனிவை கற்று தந்தவர்கள்.

ஸ்ரீகாந்த், என்னிடம் அவன் புத்தகங்களை தந்து எனக்காக வரண்டவில் முட்டி போட்டு நின்ற இந்த கணிபொறி வல்லுனரிடம் நான் கற்று கொண்டது பணத்தை விட நட்பிற்கு பலம் அதிகம் என்பதை.

என் வாழ்க்கையின் மிக பெரிய திருப்பம், உயர் நிலை படிப்பை MDTல் தொடர்ந்தது. இங்கு தான் நான் கலாட்டா நாயகனாக மாறினேன்.இதை பற்றி தனி ஒரு Blogல் விவரிப்போம். இங்கும் எனக்கு நல்ல நண்பர்கள் கிட்டினார்கள். ஸ்ரீனிவாசன், செந்தில், குரு, நீலகண்டன், துரைசாமி, மதன்.என்னை போலவே அனைவரும் நண்பர்களுக்காக எதையும் செய்யும் மூடர்கள்.

அடுத்ததாக என் கல்லூரி நண்பர்கள், பரத், பால முருகன், பால் ஸ்டீபன்,ஜெரால்ட், மணி, பொன்னுசாமி, அசோக், சங்கர், டொமினிக், ஹிஜாஸ், கிருஷ்ணகாந்த், மாதவராஜ், சிவ பாலன், மிராண்டா, ராஜேஷ், கிருஷ்ணகுமார், ஜிதேஷ், பினு  இன்னும் சிலர்.இவர்களிடம் கற்று கொண்டது ஏராளம்.

பரத் , இவர் இல்லாவிட்டால் நான் இன்று இந்த நிலைமையில் இல்லவே இல்லை.நான் கேட்காமலே என் நிலைமை அறிந்து வாரி வழங்கிய வள்ளல். நான்கு வருடங்கள் என்னை கவனித்து கொண்டவர். வேலை தேடும் நாட்களிலே எனக்கு சோறு போட்டவர். இன்னும் எத்தனை , எத்தனையோ.இவனை பார்த்து  தான் இவனை போல் நாமும் பிறருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவ வேண்டும் என்ற உத்தம எண்ணம் எனை ஆட்கொண்டது.
 
இன்னும் நண்பர்கள்  யாகூப், அசோக்,  ஷ்யாம்,  விவேக்,  திவாகர், ஈஸ்வர், குருமூர்த்தி, சுகு, அன்பு, ஷமீம், ஐயப்பன், சுதிர், கற்பகம், சுனிதா போன்ற நல்ல உள்ளங்கள் என் நண்பர்களாக கிட்டியது என் பாக்கியமே!

இவர்களிடம் கற்று கொண்ட நல்ல விஷயங்களை செயல்படுத்தி நாலு பேருக்காவது உதவி செய்வதே இவர்களுக்கு நான் ஆற்றும் நன்றி கடனாகும்.  

நண்பர்கள் என்றால் சேர்ந்து கும்மாளம் அடிக்கவும் , கூத்து அடிக்கவும் என்ற எல்லோரின் எண்ணங்களை மாற்ற ஒரு முயற்சியே இந்த கட்டுரை.

4 Responses to “நண்பர்களால் நலம் பெற்றேன்”

  1. நண்பா… ரொம்ப… சந்தோஷமா இருக்கு…

    அப்ப பிஎம்சி சாப்ட்வேர் ஹபிபுல்லா ரோட்ல இருந்திச்சு. நமக்கு சம்பளம்ன்னு ஒன்னும் கிடையாது. எப்படா சம்பளம் போட்டு தருவாங்கன்னு தெனமும் கனவு கண்டுட்டு இருப்போம். எங்க ரூம்ல சமைக்கிரதால தினமும் நான் சாப்பாடு கொண்டுட்டு வருவேன். அத நீயும் நானும் கிரொவுண்ட் ப்ளோர்ல போய் சேர்ந்து சாபிடுவோம். அப்புரம் நீ ஒரு பொட்டி கடைக்கு கூட்டிட்டு போவெ. அங்க உன்னோட லன்ஞ்ச்சான வாழை பழத்தை ஆளுக்கு ஒன்னா சாப்பிடுவோம். அப்புரமா கொஞ்ச நாள்ல நீ ராம்கொ போய்ட்ட. நீதான் எனக்கு அங்க இன்ட்டர்வியூ பத்தி சொன்ன. அப்புரம் நானும் ராம்கோ வந்துட்டேன். இப்ப நீ சிங்கப்பூர்ல இருக்கெ. நான் பெங்களூர்ல இருக்கேன்.

    எனக்கும் என்ன சுத்தி இருக்கிர நன்பர்களுக்கும் பொதுவா இருக்கிற என்னம் நாம வாழ்கைல சாதிச்சிட்டோம்னு… சாப்பாடுக்கே சிங்கி அடிச்சிட்டு.. மெஸ் பில் கட்ட முடியாம… நல்ல டிரஸ் எடுக்க வக்கில்லாம இருந்திட்டு இப்ப 5 ஸ்டார் ஹொட்டெல்ல பபே சாபிடரத நெனச்சா அப்படி என்னம் வர்றது இயற்கை தான்… ஆனா நாம என்ன பெருசா என்ன சாதிச்சிட்டோம்னு எனக்குள்ளயே கேக்கரப்போ… ஒன்னும் இல்லைன்னு தான் பதில் வருது…. என்னோட நன்பன் ஒருத்தன் physics படிச்சான். சொந்த ஊரான கரூர்லயே teacher வேலை… நேரா நேரம் அம்மா கையால சோரு… அடிக்கடி ஆப்பம் பாலுன்னு பலகாரம், அண்ணன் புள்ளைங்களோட தெனமும் வெளயாட்டு… நோம்பி வந்த்தா சொந்த்தகாரங்க வீடு.. முனியப்பன் கோயில் கெடா வெட்டு… bajaj c.t 100 வண்டி… தெரந்த வாசல்ல தென்ன மரம் வெச்ச சொந்த வீடு… இங்க நான் வாங்கர சம்பளத்துல அத்தனையும் செஞ்சுக்கரதுக்கு வாழ் நாள் பூரா வேல செய்யனும் போல இருக்கு…

    இன்னொரு angle’ல பாத்தா.. என்ன விட நல்லா படிச்சான் என்னோட இன்னொரு நன்பன்… ஆனா சூழல் அவன chemistry படிக்க வெச்சிருச்சு… என்னோட ஒரே காலேஜ்ல b.sc படிச்சான் அப்புரம் m.sc படிச்சான்… இப்போ p.hd பண்னினாத்தான் மதிப்புன்னு அதையும் பன்றான்… இவன் எப்போ படிச்சு முடிப்பான்னு யாருக்கும் தெரியாது… ரொம்ப ப்ரில்லியன்ட்.. அட்லீஸ்ட் என்னவிட.. அவன் நேரம் அவன் படிச்சதுக்கு கம்ப்யூட்டர் மாதிரி பெரிய மவுசு இல்ல… ஏதோ அடிக்கர கம்ப்யூட்டர் காத்துல தூக்கி அடிச்சுக்கிட்டு போன குப்பை கூளத்துல நாமளும் ஒருத்தன்னு தான் எனக்கு என்னம் வருதே தவிர பெருசா ஒன்னும் சாதிச்ச மாதிரி என்னம் வர மாட்டேங்குது.. ஹ்ஹ்ஹ்ஹூஹூம்ம்…. வெரும் காத்து தான் வருது….

  2. Vivek said

    Super maapla!! arumaiyaana thuvakkam, kalakunga ..vaazhthukkal..

    Kural konjam ipdi maathanum,

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு

  3. Elaine P Ganapathy said

    Please share this to everyone. How about translating it in universal language?

    Thanks. ^_^

  4. Loganathan said

    hi raja

    thanks for sharing this message to all for us.

    yes i know this is the result for your bouldness .

    god bless you .

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>